×

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 350 பார்மசிஸ்ட்கள் நியமனம்

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 350 பார்மசிஸ்ட்டுகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம்    முழுவதும் 48 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள்,  ஒரு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை, 29 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 273 தாலுகா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 460 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15   சென்னை சமுதாய நல சுகாதார மையங்கள், 10 இஎஸ்ஐ மருத்துவமனைகள், 216 இஎஸ்ஐ டிஸ்பென்சரிகள், 1,491 பாரம்பரிய மருத்துவ சிகிச்சை    மருத்துவமனைகள் உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் இப்போதைய நிலவரப்படி 12 ஆயிரம் பார்மசிஸ்ட் இடங்கள் புதிதாக உருவாக்க வேண்டும். ஆனால், இருக்கும் பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்றாக மட்டுமே ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 335 பார்மசிஸ்ட்டுகளை நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்துக்கு 7 முதல் 10 பார்மசிஸ்ட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 12 ஆயிரம் பார்மசிஸ்ட்டுகளுடன், தற்போதைய பணியிடங்களில் ஓய்வு பெறுவது, பணியிட மாற்றம் போன்றவற்றால் காலியாகும் பணியிடங்களுக்கும் பார்மசிஸ்ட்டுகளை நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pharmacists ,state hospitals ,state , State, government hospital, pharmacists
× RELATED உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த...