×

கோயம்பேடு உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 4 நாட்களுக்கு 24 மணிநேரமும் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பேருந்து நிலையங்களுக்கு  செல்பவர்களின் வசதிக்காக 250 இணைப்பு பேருந்துகள் இயக்க எம்.டி.சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இந்த பேருந்துகள் நேற்று, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 4 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இதன்மூலம் மாநகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதாக புதிய பேருந்து நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். இதேபோல், பயணிகள் தங்களது புகார்களை தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி சேவை 18004256151 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus operators ,bus terminals ,Koyambedu , Pongal Festival, Special Bus Motion, Koyambedu
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு