×

சில்லி பாயின்ட்...

* இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவருக்கும் சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கவுரவ உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

* ‘பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டியளித்த ராகுல், ஹர்திக் கருத்துகளை நாங்கள் ஏற்கவில்லை. அது அவர்களின் சொந்த கருத்து. அதற்கும் இந்திய அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது போன்ற பேச்சை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம்’ என்று கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீன அணியை நேற்று வீழ்த்தியது.

* மதிப்பு வாய்ந்த பிரபலங்கள் பட்டியலில் கோஹ்லி தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார் (₹1200 கோடி).

* பாகிஸ்தான் அணியுடன் ஜோகன்னஸ்பர்கில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (மார்க்ராம் 90, அம்லா 41, புருயின் 49, ஹம்சா 41). பாக். பந்துவீச்சில் பாஹீம் அஷ்ரப் 3, ஆமிர், அப்பாஸ், ஹசன் அலி தலா 2, ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்துள்ளது.

* இலங்கை அணியுடன் ஆக்லாந்தில் நேற்று நடந்த டி20 போட்டியில், நியூசிலாந்து 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. டெய்லர் 33, பிரேஸ்வெல் 44 ரன் (26 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), குக்லெஜின் 35 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 16.5 ஓவரில் 144 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (திசாரா 43, குசால் பெரேரா 23, டிக்வெல்லா 18, குசால் மெண்டிஸ் 17). ஆட்ட நாயகன்: பிரேஸ்வெல்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Virat Kohli, Ravi Shastri, Honorary Member Card
× RELATED ராயல்ஸ் ராஜநடைக்கு தடை போடுமா சன்ரைசர்ஸ்?