பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து : ஹர்திக் பாண்டியா,கே.எல்.ராகுல் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ’காபி வித் கரண்’ (Coffee with Karan) எனும் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. பின்னர் இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,Harid Pandia ,KL Kahl , BCCI suspends, Haridoc Pandia , KL raghul
× RELATED இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டி-20...