×

இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை

மும்பை : இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல். லோகேஷ் ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு  எழுந்தது. பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். இதனால், அவர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதனை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.

“காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துக்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு வகையிலும் யாருடைய உணர்ச்சியையும் காயப்படுத்த நினைக்கவில்லை” என்று அவர் ட்விட்டரில் கூறியிருந்தார். எனினும் இருவர் மீதும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிருப்தியில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதனிடையே நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் விசாரணை நடத்திய பிறகு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,cricketers ,Indian ,Haridih Pandya , Haridh Pandya, K. Lahore, BCCI, ban, coffee with Karan
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்