×

குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ எந்த ஆவணங்களும் தராததால் விசாரணையில் தொய்வு: அமலாக்கத்துறை தகவல்

சென்னை: குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ எந்த விவரங்களும் தராததால் விசாரணையை தொடர முடியவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. ஓராண்டாகியும் குட்கா வழக்கு குறித்து சிபிஐ எந்த விவரங்கள், குற்றப்பத்திரிக்கையும் தராததால் விசாரணைகள் அனைத்தும் முடங்கியது என கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையானது மாநில அல்லது மத்திய விசாரணை ஆணையம் வழக்குப்பதிவு செய்தால் தான் அதை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்யும். எனவே தான் சிபிஐ வழக்குப்பதிவு செய்த உடன் அதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இதுதொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் கேட்டபபோது முதற்கட்டத்தில் எவ்வித ஆவணங்களையும் அவர்கள் தரவில்லை.

இதனைத்தொடர்ந்து இவ்விகாரத்தில் 6 குற்றவாளிகள் மீது இடைக்கால குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் டெல்லி சிபிஐ அதிகாரிகள், தொடர்ந்து இது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு தராமலேயே மறுத்து வந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபபோது, டெல்லி சிபிஐ அதிகாரிகள், சென்னையில் உள்ள தமிழக சிபிஐ அதிகாரிகளை ஓரம்கட்டி தொடர்ந்து விசாரணையை நடத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியாகி விடுகிறது என்ற அடிப்படையில் அவர்கள் எவற்றையும் தெரிவிப்பதில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும், அதே அடிப்படையில் அமலாக்கத்துறையில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு இந்த தகவல்கள் தெரிந்துவிட்டால் விசாரணை தடைபட்டுவிடும் என்ற அடிப்படையில் தொடர்ந்து ஆவணங்கள் தரப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் அமலாக்கத்துறையினரால் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக யாருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமலாக்கத்துறைக்கு மட்டுமே சொத்துக்களை முடக்குவதற்கு அதுதொடர்பான பணம் ஆகியவற்றை முடக்குவதற்கும் அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் குட்கா ஊழலில் எவ்வளவு பணம் பரிமாறப்பட்டுள்ளது, அந்த பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள் எவை என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சிபிஐ ஒப்படைத்தால் தான் அமலாக்கத்துறையினரால் சொத்துக்களை முடக்க முடியும். இதுவரை ஆவணங்கள் கிடைக்காததால், இதுதொடர்பான விசாரணையை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI , Gudka Case, CBI, Documents and Implementation Department
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...