×

பொன்னராவதி பகுதியில் பழமை மாறாமல் தொடரும் தொழில் : பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் சகோதரர்கள்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் பழமை மாறாது பாத்திரங்களுக்கு ஈயம் பூசப்படுகிறது. கண்டியாநத்தம் கிராமத்தில் பாத்திரங்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழிலாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. இங்கு இருந்து பித்தளை பாத்திரங்கள் செய்து பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். அப்போது பொன்னமராவதி கொப்பனாப்பட்டி சாலையில் கண்டியாநத்தம் உலோக தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு அங்கு பாத்திரங்கள் செய்து கூட்டுறவு துறை மூலம் பாத்திரங்கள் எடுத்து கொண்டு வந்தனர்.

அதுவும் சரி வர வியாபாரம் ஆகாதாதால்  அந்த சங்கமும் பல ஆண்டுகளாக மூடப்பட்டு விட்டது. ஒரு சிலர் பொன்னமராவதியில் பாத்திர தொழில் செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வெளியூர் சென்று  மாற்றுத்தொழில் செய்து வருகின்றனர்.  ஒருசிலர் பழைய பாத்திரங்களை ஈயம் பூசி புதுப்பித்து கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். பின்னர் மிஷின் தொழில் வந்ததும் இது போன்று ஈயம் பூசும் தொழில் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் நேற்று கண்டியாநத்தம் கிராமத்தில் பழைய அண்டா மற்றும் பாத்திரங்களுக்கு சண்முகம் மற்றும் ரெங்கராஜ் சகோதரர்கள் ஈயம் பூசும் தொழில் செய்தனர். பல ஆண்டுக்கு பின்னர் பழமை மாறாது பாத்திரங்களுக்கு மண்ணில் அடுப்பு மூட்டி ஈயம் பூசுவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnaravathi ,characters ,brothers , Ponnaravati, vessel, brothers
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்