×

சிங்கம்புணரியில் துள்ளிக்கிட்டு தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் தை மாதம் தொடங்கியதிலிருந்து வைகாசி மாதம் வரை பெரும்பாலான கிராமங்களில் மஞ்சு விரட்டு நடைபெறுவது வழக்கம். கோயில் திருவிழா மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சார்பாக நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளுக்கு  சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டின் உரிமையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து வரவேற்பார்கள். பொங்கல் வந்தவுடன் மஞ்சு விரட்டு ஆர்வலர்கள் மாடுகளை விலை கொடுத்து வாங்கி அதற்கு  பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மஞ்சுவிரட்டிற்கு எனவும், வாடிவாசல் ஜல்லிக்கட்டுக்கு என பல வகைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.   

காளையினை கயிற்றால் கட்டப்பட்டு அவற்றை சுற்றி இளைஞர்கள் போக்கு காட்டி அவற்றை முட்டச் செய்வது. மண் குத்துதல், நீச்சல் பயிற்சி, ஒட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சாலையில் ஒடும் காளைகள் வழுக்கி விழாமல் இருக்க காளைகளுக்கு கால்களில் லாடம் அடித்து  தயார்படுத்தி வருகின்றனர். இதே போல் மாடுபிடி வீரர்கள் காளைகளை லாவமாக பிடிக்கும் வகையில் கபடி, மூச்சுப்பயிற்சி , ஒட்டப் பந்தயம் உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் காளைகள், காளையர்களுடன் பொங்கல் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cinkampunari, jallikattu, Bulls
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்