×

ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் முன் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுப்பு

ராய்ப்பூர்: ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரும் முன்அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சிபிஐ-க்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேற்குவகங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சிபிஐ முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்துள்ளார். இவர்களை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சத்தீஸ்கர் அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் புதிய விவகாரங்களில் சிபிஐ அதிகார வரம்பை சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001-ம் ஆண்டு அளித்த ஒப்புதலை சத்தீஸ்கர் உள்துறை அமைச்சகம் திரும்பபெற்றுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றில் சிபிஐ-க்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,CBI ,West Bengal Chhattisgarh , West Bengal, Andhra Pradesh, Chhattisgarh, CBI investigation
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...