×

டெல்லியில் 2 நாள் பாஜக மாநாடு தொடக்கம்... தேசிய செயலாளர்கள் உட்பட 12,000 பேர் பங்கேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர்கள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்பட சுமார் 12,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் முதல் நாளான இன்று கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உரையாற்றுகிறார். நாளை பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பார் என்று தெரிகிறது.

5 மாநில தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த போதிலும் நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேறியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா பாரதிய ஜனதா கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தை தந்துள்ளது. அதை அடிப்படையாக கொண்டு விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் நலனில் அக்கறை காட்டும் வகையில் சமூகநீதிக்காக போராடும் கட்சி என தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : convention ,Delhi ,BJP ,Secretaries , BJP, National Conference, National Secretaries, Amit Shah, Prime Minister Modi
× RELATED காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட...