×

ஆப்கானிஸ்தானில் காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில், அந்நாட்டின் தக்கார்  மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில்  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terror attack ,Taliban ,police checkpoints ,Afghanistan , 8 dead,Taliban,terror attack, police checkpoints,Afghanistan
× RELATED மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த...