×

மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதலமைச்சர் ஆக முடியாது: அப்சரா ரெட்டி பேட்டி

சென்னை: நடிகர் ரஜினியை ஏஜென்டாக வைத்து பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதாக மகளிர் காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளர் திருநங்கை அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார். தேசிய அளவில் புகழ்பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளார் என்ற பன்முகம் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. முதன் முதலாக கடந்த 2016-ல் பாஜக-வில் இணைந்தார். அதற்கு பிறகு அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

அதிமுகவில் இருந்து விலகி திருநங்கை அப்சராரெட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அப்சரா, ரஜினி எந்தப் பேட்டைக்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும், மக்களின் விசுவாசம் இல்லாமல் முதலமைச்சராக முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் ரஜினியை ஏஜென்டாக வைத்து பாஜக ஆட்சிக்கு வர நினைப்பதாகவும், அது ஒருபோதும் நடக்காது என்றும் அப்சரா தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini ,interview ,Apsara Reddy ,Chief Minister , People, Vishwamam, actor Rajini, Chief Minister, Apra Reddy
× RELATED சில்லி பாயின்ட்…