×

இந்திய பெருங்கடலில் சீனா கடற்படையை பலப்படுத்தி வருகிறது : இந்திய கடற்படையின் தளபதி தகவல்

புதுடெல்லி : சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தி வருவதாக இந்திய கடற்படையின் தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் எந்த நேரத்திலும் 6 முதல் 8 சீனக் கப்பல்கள் இருப்பதாகவும், கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை கப்பல்கள் நிரந்தரமாக முகாமிட்டிருப்பதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். தனது ராணுவ பலத்தை அதிகரிக்க சீனா பெருமளவுக்கு பணத்தை செலவு செய்து வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 80 போர்க்கப்பல்களை கடற்படையில் இணைத்திருக்கிறது என்றும், சுனில் லாம்பா சுட்டிக் காட்டியுள்ளார்.

சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் சீனக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நீர்மூழ்கிக் கப்பல்களை பாதுகாக்க சரக்கு கப்பல்களை  பயன்படுத்துவது முற்றிலும் பொருந்தாத ஒரு செயல் என்றும் அவர் கூறியுள்ளார். 2008ம் ஆண்டு முதல் முதல் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக சீனா கப்பல்களை நிறுத்தி வருகின்றது. இதன் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சீனா தனது கடற்படைகளை நவீனமயமாக்கி மேலும் பலபடுத்தி வருகின்றன என்று இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் சுனில் லாம்பா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,navy ,Indian Ocean ,Indian Navy ,Commander , Indian Ocean, China Navy, Indian Navy Commander, Sunil Lamba
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...