×

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த முடிவுக்கு: எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

அமெரிக்கா: அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்? என்றார். அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார். எல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எச்சரித்தனர்.

இதனால் சற்று இறங்கிவந்த டிரம்ப் எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று  தெரிவித்தார். இதற்கும் 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது டிரம்ப் சில நிபந்தனைகளை விதித்தார். இதை நான்சி பெலோசி ஏற்க மறுத்தார். நிதி முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உங்கள் கோரிக்கைக்கு நான் சம்மதம் தெரிவித்தால் தடுப்புச் சுவர் திட்டத்துக்கு ஒப்புதல் தர நீங்கள் முன்வருவீர்களா? என டிரம்ப் கேட்டதற்கு நான்சி பெலோசி ‘முடியாது’ என்று தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப் ‘பை பை’ என்று கூறிவிட்டு ஆவேசமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opposition ,Donald Trump ,Mexico ,border ,Democrats , conclusion,wall , Donald Trump, border,Mexico
× RELATED அதிபருக்கான வேட்பாளர் தேர்வு : நிக்கி ஹாலே விலகல்