×

அலகாபாத்தில் கும்பமேளா விழா ஏற்பாட்டிற்கான கட்டிடம் இடிந்து விபத்து : இருவர் காயம்

உத்தரபிரதேசம் : பிரியாகராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தில் கும்பமேளா விழாவிற்காக கட்டப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறக்கு தளம் திடீரெட இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அலகாபாத்தில் முதல் கும்பமேளா வரும் ஜன., 15ம் தேதி தொடங்கி மார்ச் 4ம் தேதி வரை வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. இந்த விழாவிற்காக ரூ. 4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 250 சதுர கிமீ பரப்பளவில் தற்காலிக நகரத்தை உருவாக்கி வருகின்றனர்.

அங்கு நடைபெற உள்ள விழாவிற்கு வரும் தலைவர்கள் ஹெலிகாப்டர்களை இறக்குவதற்கு ஏதுவாக ஹெலிப்போர்ட் எனப்படும் இறக்குதளம் கட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கள் இரண்டு தொழிளாலர்கள் சிக்கி கொண்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Building collapse ,festival ,Kumbhala ,Allahabad , Allahabad,Kumbhmela Festival,Accident,Piriyakaraj
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...