×

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்...... இந்திய ராணுவம் பதிலடி

பூஞ்ச்: காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. கடந்த மூன்று தினங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் 7-வது அத்துமீறிய தாக்குதல் இதுவாகும். பூஞ்ச் செக்டாரில்  உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே  2003 ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் 2,936 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் 2018ம் ஆண்டு தான் அதிகமாக தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது 7 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,army ,border ,Indian Army , Kashmir border, Ceasefire Agreement, Pakistan Army, Attack, Indian Army
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி