×

மக்களுக்காக ‘கள்ளக்குறிச்சி தனி மாவட்டம்’ வேண்டுமென அன்றே சொன்னது `தினகரன்’ இப்போ அறிவித்தது தமிழக அரசு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்கக்கோரி மக்களின் குரலாக ``தினகரன்’’ நாளிதழ் அன்றே சொன்னதை நேற்று முன்தினம் சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாட்டின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் ஆகிய பகுதிகள் மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது. இதன்காரணமாக உள்கட்டமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் புறக்கணிக்கப்படும் சூழல் இருந்தது.

குறிப்பாக குடிநீர், மின்சாரம், சாலை வசதி என அடிப்படை வசதிகளை கேட்டுப்பெறுவதற்காக மீக நீண்ட தூரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு வர வேண்டியிருந்து. மேலும், அதிகாரிகளை சந்திப்பதும், கோரிக்கை வைப்பதும் குதிரைகொம்பாகவே இருந்தது. எனவே கள்ளக்குறிச்சி வளர வேண்டுமானால் தனி மாவட்டம்தான் தீர்வு என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் `தினகரன் நாளிதழ்’ ஆணித்தரமாக செய்தியாக வெளியிட்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி மக்களின் குரலாக ``தினகரன்’’ நாளிதழில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. அத்துடன் மாதிரி வரைப்படத்தையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.  இதற்கு சாதகமான அம்சங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல வாசகர்கள் ``தினகரன்’’ நாளிதழை  பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளனர். சிலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். இப்பிரச்னையை அரசியல் ரீதியாக முன்னெடுக்க வைத்ததிலும் பெரும்பங்கு உண்டு. இதன் பலனாக தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்ட கோரிக்கையை அரசியல் கட்சிகளிடம் பொதுமக்கள் வைத்தனர்.இதனை வைத்துதான் கடந்த 2013ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிகை எடுக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தற்போது கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dinakaran ,district ,Kallakurichchi ,Government of Tamil Nadu , 'Kallakurichchi ,'Dinakaran',Tamil Nadu ,Government announced
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...