×

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாமக வாய் திறக்காதது ஏன்?: திருமாவளவன் கேள்வி

சென்னை: சமூக நீதிக்கு ஆபத்து, நாடாளுமன்றத்தில் பாமக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தில் பாமக உறுப்பினர் அன்புமணி அதை  எதிர்க்காதது ஏன்? பாஜவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது.நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் போது நிச்சயமாக அவர் அதை எதிர்த்துப் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில் அந்த மசோதா மீது பாமக என்ன கருத்தைத் தெரிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் எதிர்த்துப் பேசாததன்மூலம் அந்த மசோதாவுக்கு மறைமுக ஆதரவு அளித்தது ஏன்? எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் ராமதாஸ் இந்தப்  பிரச்சனையில் பாஜ அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்?எதிர்வரும் தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்? உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறை இருந்திருந்தால்  இடஒதுக்கீட்டு கொள்கையை குழிதோண்டி புதைக்கும் பாஜவின் மோசடியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?அதை செய்யாமல் மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mouthpiece ,Parliament ,Thirumavalavan , 10 per , Mamata , Parliament, open ?, Thirumavalavan
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...