×

உள்ளாட்சி தேர்தல் காலம் நீட்டிப்பு தோல்வி அச்சமே காரணம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2016 அக்டோபரில் நடத்தி முடித்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை இரண்டாண்டுகளாக அதிமுக அரசு நடத்த மறுத்து வருகிறது. தங்களின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகளை தேர்வு செய்து கொள்ளும் உரிமை  மக்களுக்கு மறுக்கப்படுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து, தேர்தலை சந்தித்தால் படுதோல்வி நிச்சயம் என்ற அச்சத்தில் சட்டத்தின் சந்து, பொந்துகளில் பதுங்கி வரும் அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை  மேலும் 6 மாதகாலம் (ஜூன் 2019) நீடித்திருப்பது ஜனநாயக மரபுகளுக்கும், நடைமுறைகளுக்கும், அரசியல் அமைப்பு சட்ட நிலைகளுக்கும் எதிரானது. அதிமுக அரசின் மக்கள் விரோத, சட்ட அத்துமீறல் நடவடிக்கை  கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Mutharasan , Local Elections,failure,reason,condemning Muthrasan
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...