×

சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்: கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

மும்பை: சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காபி வித் கரண் எனும் நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்துகொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிப்பரப்பானது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராபிட் ஃபயர் சுற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கரண் ஜோகர் கேள்வியெழுப்பினார். இதற்கு சற்றும் யோசிக்காமல் கே.எல்.ராகுலும், ஹார்திக் பாண்டியாவும் சச்சினை விட விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என பதில் கூறினர். அதுமட்டுமல்லாது, அதே நிகழ்ச்சியில் பெண்கள் குறித்தும் ஹார்திக் பாண்டியா மோசமாக பேசினார்.

இதனால், அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து, இதுபோன்று கருத்து கூறியதற்காக தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஹார்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். அதில் அவர், காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசியதற்குக் கிடைத்த எதிர்வினைகளைக் கண்டபிறகு என் பேச்சால் எந்தவிதத்தாலும் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்வதோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பதிலளிக்க ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐயின் நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசியுள்ளார்கள். பாண்டியாவின் மன்னிப்பு போதாது என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது. மேலும், 24 மணி நேரத்துக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,cricket players ,KL Gavaskar ,Harithi Pandia , BCCI,notice,Hardik Pandya,KL Rahul,Sachin,Virat Kohli
× RELATED விமான பயணிகளுக்கு மத்திய அரசு கடும்...