×

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கபடுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மணிமுத்தாறும் ஒன்றாகும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வந்து குளித்துச் செல்வார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மணிமுத்தாறு அருவியில குளிக்க தடை விதிக்கப்பட்டது.

19 நாட்களாக அருவில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் மணிமுத்தாறு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது ணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு சீரானது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு சீரானதால் 19 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public ,Manimutharu ,Nellai District , Nellai, Manimuttharu Falls, sanitation
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் தடமில்லாமல்...