×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் பித்தளை பானை தயாரிக்கும் பணி தீவிரம்

குமகோனம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் இரவு பகல் பாராமல் பித்தளை பானை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தை முதல் நாளில் மண்பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவார்கள். இதனையொட்டி கும்பகோணம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பித்தளை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. தடையின்றி மின்சாரம் கிடைப்பதால் தொழிலாளர்கள் தடையின்றி இரவு, பகல் பார்க்காமல் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கும்பகோணத்தில் பித்தளை, உலோகப்பானைகள் தயாரிப்பு பணிகள் தனிச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

சுத்தமான பித்தளை, நேர்த்தியான வடிவமைப்பு, பளபளக்கும் அமைப்பு என கும்பகோணம் பித்தளைக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு பெற்றவை. இதுவரை தயாரிக்கப்பட்ட பொங்கல் பானைகள் காரைக்குடி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பெரு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumbakonam ,festival ,Pongal , Pongal festival, Kumbakonam, brass pot, work
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி