×

ஹரியானாவில் ஒரே கல்லறையில் ஆண், பெண் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

சண்டிகர்: ஹரியானாவில் ஆண், பெண் எலும்பு கூடுகள் முதன் முறையாக ஒரே கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஹரியானாவிலுள்ள ரகிகரி என்ற இடத்தில் ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த ஆண், பெண் எலும்பு கூடுகள் ஒரே கல்லறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்பு கூடுகளின் கைகள் மற்றும் கால்கள் நீளமான தோற்றத்தில் உள்ளன. இந்த ஜோடிகள் ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதாகவும், அவைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cemetery ,Haryana , Haryana, the only grave, male, female skeletons,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...