×

பிரிவினைவாதத்தை பரப்ப பயன்படும் சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராணுவ தளபதி

புதுடெல்லி: பிரிவினைவாதத்தை பரப்ப முக்கிய தளமாக பயன்படும் சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொல்பொருள் ஆய்வு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிபின் ராவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கபடுவதாக குற்றம்சாட்டினார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைகள் நிபந்தனைகளின்றி இருக்க வேண்டும். தாலிபான்கள் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது.

இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் பேசிய அவர், தவறான தகவல், இல்லாத ஒன்றை திரித்து கூறுதல், மதம் குறித்து தவறான செய்திகளை பரப்புதல் உள்ளிட்டவற்றால் இந்தியாவிலும் காஷ்மீரிலும் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் தான் படித்த இளைஞர்கள் அதிகம் பேர் பயங்கரவாத அமைப்பில் இணைகின்றனர். எனவே பிரிவினைவாதத்தை பரப்ப பயன்படும் சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். பயங்கரவாதம் புதிய வகையான போர் உத்தியாக மாறியுள்ளது. பலவீனமான நாடு ஒன்று, மற்ற நாடு மீது அழுத்தத்தை கொடுக்க பயங்கரவாதத்தை தனது கொள்கையாக வைத்துள்ளது. தற்போது, பயங்கரவாதம் பல தலை அசுரன் போல் வேகமாக பரவி வருகிறது என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,army commander , radicalisation,social media,federal government,Army Chief Bipin Rawat
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...