×

ஈரான் கடற்படையினரால் கைதான 3 குமரி மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வர உறவினர்கள் கோரிக்கை

ரியாத்: ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3 பேரை மீட்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி உள்ளன. அதே நேரம், வெளிநாடுகளுக்குச் சென்று தங்கி, மீன் பிடிக்கும் மீனவர்கள் திசை மாறிச் செல்வதால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

குளச்சல் பகுதியைச் சேர்ந்த சகாய பீட்டர், பொழிக்கரையை சேர்ந்த சுதர்ஷன், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துஅடிமை ஆகிய மூவரும் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம் போல் கடந்த 5ம் தேதி கடலில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் எதிர்பாராதவிதமாக ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரான் கடற்படையினரால் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களையும் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : relatives ,fishermen ,navy ,Iranian , Iran, Navy, Kanyakumari, fishermen, demand, Saudi Arabia
× RELATED இலங்கை சிறையிலிருந்து...