×

சூரிய குடும்பத்திற்கு வெளியே சிறிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவிப்பு!

வாஷிங்டன் : சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகத்தை நாசா ஆய்வு மையம் அனுப்பிய டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்காக நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. ஃபுளோரிடாவின் கேப் கெனரவலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் 9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உள்ளதா என்று இந்த செயற்கைக்கோள் ஆராயும் என நாசா ஏற்கெனவே தெரிவித்திருந்தது. டெஸ் செயற்கைக்கோள் தன்னுடைய அறிவியல் ஆய்வை ஜூலை மாதம் 25ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே புது கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே சூப்பர் பூமி 6.3, எல்.ஹெச்.எஸ் 3844பி என்ற இரண்டு கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3வது கிரகத்திற்கு ஹெச்.டி 21749பி என நாசா பெயரிட்டுள்ளது. இந்த கிரகம் மற்ற இரண்டு கிரகங்களுடன் ஒப்பிடுகையில் 36 நாட்களில் நிதானமாக நட்சத்திரத்தை சுற்றி வருகிறது என தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் பூமி 6.3 நாட்களிலும், எல்.ஹெச்.எஸ் 3844பி கிரகம் வெறும் 11 மணி நேரத்திலும் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் நட்சத்திரத்திற்கு அருகாமையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகமானது பூமியை போல மூன்று மடங்கு பெரியது என்றும், சூரியனை போல பிரகாசமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஹெச்.டி 21749பி கிரகமானது ஒரு சிறிய குளிரான கிரகம் என்று நாசா தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NASA ,planet ,solar system , Solar System, New Planet, NASA, Des Satellite
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்