×

கேமரா ஆபரேட்டர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை

*  பொதுமக்களுக்கு சிடி தரா விட்டால் ₹100 அபராதம் * ஐஜி எச்சரிக்கை

சென்னை: கேமரா ஆபரேட்டர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு சிடி தரா விட்டால் ரூ.100 அபராதம் பதிவுத்துறை ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் ஆவண பதிவில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் பத்திரம் பதிவு செய்ய வரும் கேமராவில் பதிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு பதிவு செய்யப்படுவதை சிடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சிடி கட்டணம் ரூ.50 பதிவுத்துறையால் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கென சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தலா ஒரு கேமரா ஆபரேட்டர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஆவணபதிவு நிகழ்வுகளை சிடியில் எழுதி ஆவணத்துடன் ஆவணத்தாரரிடம் இருந்து வழங்கப்படுகிறது. இந்த பணியில் ஈடுபடும் கேமரா ஆப்ரேட்டர்களுக்கு பின்பற்ற வேண்டியவை குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

àகேமரா ஆபரேட்டர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு காலை 9.45 மணிக்கு வர வேண்டும். மாலை 6 மணிக்கு வர பணியில் இருக்க வேண்டும். கேமரா ஆப்ரேட்டர் தாமதமாக வந்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும். àகேமரா ஆபரேட்டர்கள் அலுவலகத்திற்கு வராவிட்டால், அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.àகேமரா ஆபரேட்டர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும், அவர்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்படும். à சார்பதிவாளர் அலுவலகங்களில் கேமராவில் பழுது ஏற்பட்டால் ஒரு மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு சரி செய்யவில்லை என்றால் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த நாளும் பிரச்சனை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். à9 மண்டல அலுவலகங்களில் கண்காணிப்பு வசதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். ஆவண பதிய வரும் பொதுமக்களுக்கு சி.டி தரா விட்டால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : camera operators , Camera operators , criminal, involved
× RELATED கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர்கள்...