×

வக்கீலாக பதிவு செய்யும்போது போஸ்டர் ஒட்டினால் பதிவு நிறுத்தம்: தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை

சென்னை: சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்யும்போது விதிகளை மீறி  போஸ்டர் ஒட்டுவோரின்  பதிவு  ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்  என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை  விடுத்துள்ளது. சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய்யும் போது, போஸ்டர்கள் ஒட்டக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் உள்ளன. எனவே வக்கீலாக பதிவு செய்யும் போது, இதுபோன்ற விதிமீறலில்  ஈடுபடப் போவதில்லை என்று உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
இதை மீறி, வக்கீலாக பதிவு செய்தபோது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக 11 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், விதிகளை மீறி போஸ்டர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் வக்கீலாக பதிவு செய்வது 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று எச்சரித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்  கவுன்சில், இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று புதிய வக்கீல்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக மூத்த வக்கீல் சிங்காரவேலன், வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் அடங்கிய பார் கவுன்சில் குழு பிறப்பித்த உத்தரவில், தவறிழைப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உத்தரவை  பிறப்பிக்கவில்லை. தவறு செய்பவர்களை நெறிப்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : advocate ,Tamil Nadu , registering, advocate, Poster stick Record stop, Tamil Nadu barcouncil ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய...