×

பொங்கல் பரிசாக 1000 வழங்க தடை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை:  கோவையைச் சேர்ந்த சமூக ேசவகர் டேனியல் ஜேசுதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்து பட்டுவாடா செய்து வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முழுமையடையவில்லை. அதற்கான நிதியிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்திவிடும்.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த புள்ளிவிவரத்தில் தமிழகத்தின் வரி வருவாய் ரூ.1 லட்சத்து 12,616 கோடி என்றும் பற்றாக்குறை ரூ.3 லட்சத்து 55,845 கோடி எனவும் தெரியவந்துள்ளது. இந்த வகையில் அதிக கடன் உள்ள மாநிலங்களான மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தமிழகம் முந்தியுள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ.1000 வழங்குவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court , Pongal Gift, filed , High Court ,ban
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...