×

மழையால் 30 வீடுகள் சேதம்

மங்களூரு: தென்கனரா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவில் பெய்த கனமழையினால் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியது. தற்போது வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சூட்டை தணிக்கும் வகையில் திடீரென மாநிலத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. அந்த வகையில் தென்கனரா மாவட்டம், பண்ட்வால் தாலுகாவில் உள்ள சில மாவட்டங்களில் காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்தன. மேலும் மரங்கள் அருகில் உள்ள வீடுகளின் மீது சாய்ந்ததாலும், காற்றின் வேகத்தினாலும் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. அசம்பாவிதம் ஏற்படாத வகையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சாலையில் முறிந்து விழுந்த மரங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றினர்….

The post மழையால் 30 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Bandwal Taluka, Tenkanara district ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...