×

சபகர் துறைமுகம் விரைவில் முழு வீச்சில் செயல்படும் : நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி:  ஈரானில் உள்ள சபகர் துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் 2016ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டது. ஒப்பந்தப்படி, இந்தியா 600 மீட்டர் (1969 அடி) சரக்கு போக்குவரத்து முனையம் மற்றும் 640 மீட்டர் கன்டெய்னர் முனையத்தை அமைக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் இந்தியாவின் சர்வதேச வர்த்தக தொடர்புகள் மிக எளிதாகிவிடும். ஆப்கானிஸ்தானுடனான வர்த்தக உறவுகளுக்கு பாகிஸ்தானின் தரைவழியை நம்ப வேண்டியதில்லை. இந்த துறைமுகத்தின் ஒரு பகுதி கடந்த டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. என கப்பல்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

 இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஈரான் அமைச்சர் மொகமத் ஜாவத் ஜரீபை டெல்லியில் நேற்று சந்தித்தார். சந்திப்புக்கு பிறகு அவர் கூறுகையில், அமெரிக்கா தடையை தொடர்ந்து, ஈரானுடனான வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட துறைமுகம் விரைவில் முழு வீச்சில் செயல்பட துவங்கும். இந்தியாவில் இருந்து ரயில்களை வாங்கி ஈரான் விரும்புகிறது என்றார்.அமெரிக்க தடை இருந்தாலும், இந்தியாவின் யூகோ வங்கி மற்றும் ஈரானின் பசர்காட் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை நடைபெறும் அன ஈரான் அமைச்சர் ஈரான் அமைச்சர் ஜாவத் ஜரீப் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabar Harbor ,Nitin Gadkari , Sabar port, Iran, Nitin Gadgari
× RELATED நாக்பூர் தொகுதியில் போட்டியிடும்...