×

சென்னை உட்பட 8 பெருநகரங்களில் வீடு வாங்குவோர் அதிகரிப்பு

தேர்தலுக்குள் வாங்குங்க:

* மக்களவை தேர்தலுக்குள் வீடுகளை சலுகைகளை அள்ளித்தந்து விற்பனை செய்வதில் பில்டர்கள் பலரும் தீவிரமாக உள்ளனர்.

* தேர்தலுக்கு பின் புதிய அரசு நடவடிக்கைகளை எடுப்பதற்குள் போதுமான அளவில் விற்பனை செய்து விட வேண்டும் என்பதால் இன்னும் சலுகைகள் வர வாய்ப்புள்ளது.

* வங்கி வீட்டுக்கடன் மீதான வட்டிவீதமும் சீராக இருக்கும் என்பதால் வீடு  வாங்குவோர் அதிகரிக்கலாம் என்று பில்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுடெல்லி: சென்னை, மும்பை, டெல்லி உட்பட 8 பெருநகரங்களில் சொந்த வீடு வாங்குவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டாகவே வீடு வாங்குவதில் பலருக்கும் சிக்கல் இருந்து வருகிறது. ஒரு பக்கம் மத்திய, மாநில அரசுகளின் வரி உட்பட கெடுபிடிகள், இன்னோரு பக்கம் மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் கட்டுமான துறையை வெகுவாக பாதித்து விட்டது. பினாமி நிலங்கள் பறிப்பு, ஆதார் இல்லாமல் உரிமை கொண்டாடுவதில் சிக்கல், பத்திரப்பதிவு கெடுபிடிகள் என்று பல வகையிலும் வீடு வாங்குவோரையும், விற்போரையும் கடுமையாக பாதிக்க வைத்து விட்டன.

சென்னை, டெல்லி, மும்பை, கோல்கத்தா, புனே, அகமதாபாத், பெங்களூரு, ஐதராபாத் ஆகிய எட்டு நகரங்களில் கட்டுமான துறை பெரிதும் முடங்கி இருந்தன. பல அடுக்குமாடி  குடியிருப்புகள் விற்காமல் தேங்கி விட்டன. பல பில்டர்கள் வங்கியில் பெற்ற கடனை திருப்பி கட்ட முடியாமல் தவித்து, தொழிலை விட்டே போயும் விட்டனர். இவர்களை அடியோடு முடங்க வைத்தது ஜிஎஸ்டி வரி முறை தான். இப்படி பல வகையிலும் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தான் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை திரும்ப பெறும் வகையில் கட்டுமான துறையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. வீடு வாங்குவோர் எண்ணிக்கை  முடங்கி இருந்த நிலை மாறி, கடந்தாண்டு எடுத்த கணக்கின்படி, சென்னை உட்பட 8 பெருநகரங்களில் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்தது.

முன்னணி சர்வே நிறுவனங்கள் வெளியிட்ட சர்வே அறிக்கை:

கடந்த ஆண்டு மட்டும் கோடிகளை தாண்டிய பல மாடிக்குடியிருப்புகள் 11 சதவீதம் தேங்கி உள்ளன. அதாவது, நாடு இந்த எட்டு நகரங்களில் 4.7 லட்சம் வீடுகள் விற்காமல் உள்ளன.   அதே சமயம், நடுத்தர, சாதா வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் ஆறு சதவீதம் அளவுக்கு வீடுகள் அதிகமாக வீற்பனை ஆகியுள்ளன. சென்னை உட்பட சில நகரங்களில் சாதா பலமாடிக்  குடியிருப்புகள் 25 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கடந்த 2017ல் இந்த எட்டு நகரங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 72 வீடுகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 328 ஆக உயர்ந்துள்ளது.   கடந்த 2017ல் புனே, கோல்கத்தாவில் முறையே 1 மற்றும் 11 சதவீதம் வீடுகள் வீற்பனை சரிந்து இருந்தன. பல மாடிக்குடியிருப்புகள் விற்பனை அதிகரிக்க காரணம், பில்டர்கள் அளித்த ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் விலை குறைப்பு நடவடிக்கை தான். இவ்வாறு சர்வே அறிக்கை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : home buyers ,Chennai , Metropolitans, home buyers, increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...