×

இந்தியா - நார்வே உறவை வலுப்படுத்த ஆலோசனை : இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா - நார்வே இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து   நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடன், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், இரு நாட்டு பிரதமர்களும் ஒன்றாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “அனைத்து துறைகளிலும் எங்களது ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தோம், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புது ஆற்றல் மற்றும் புதிய வழிமுறைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்றார். இதேபோல் நார்வே பிரதமர் எர்னா கூறுகையில், “எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பு தருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் ஈடுபாடு இல்லாமல் உலகம் நிலையான வளர்ச்சி இலக்கை அடைய முடியாது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Norway ,meeting , India, Norway, Prime Minister, Meeting
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...