×

மகளிர் காங். பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்

புதுடெல்லி: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த திருநங்கை அப்சரா. இவர் பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளார் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். லண்டனில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் கடந்த 2016ல் பாஜ.வில் இணைந்தார்.  பின்னர் அதிமுகவில் இணைந்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை பெற்றார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அவருக்கு கட்சியின் மகளிர் பிரிவு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவரான ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியில் திருநங்கை ஒருவர் முக்கியப் பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அவர் நேற்று டெல்லியில் ராகுலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women's Cong ,Tirunankai Apsara Reddy ,General Secretary , Women's Cong. General Secretary, Tirunankai Apsara Reddy, appointed
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக...