×

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி: நார்வே நாட்டின் பிரதமர் எர்னா சோல்பர்க் (Erna Solberg) அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது. இன்று இந்தியா வந்தடைந்த நார்வே பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிகப்பு கம்பளம் விரித்து, முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் முக்கிய ஆலோசனை நடத்தினார். இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனையின் பின்னர், எர்னா சோல்பர்க், நரேந்திர மோடி இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். நார்வே பிரதமருடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது என்றும் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தங்கள், பன்முக ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆட்சிகள் மற்றும் பயங்கரவாததால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். முன்னதாக இன்று நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ernesto Soufberg ,Norway ,India , Norway,Prime Minister,Erna Solberg,visit,India,Prime Minister Modi,
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...