×

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெய்ஜிங்: ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியில் சிக்கி தவித்து வருகின்றனர். சீனாவில் வழக்கத்திற்கு மாறாக பனியின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. சிச்சுவான் மாகாணத்தில் பனி காரணமாக அப்பகுதியில் உள்ள ஹூவாயிங் மலை முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனி படர்ந்து காணப்படுகிறது. இதேபோல் கிரீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் உறைபனியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் தெற்குப் பகுதியில் வீசும் பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடி உயரத்திற்கு சாலைகளில் பனி உறைந்து இருப்பதால் சில வாகனங்களே சாலைகளில் இயக்கப்படுகின்றன. மேலும் பல சாலைகளில் பனியின் காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. அதிக பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிர் காரணமாக தெற்கு பவாரியா பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டியுள்ள வார்ங்கோ என்ற பகுதியிலும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவும் இந்த கடுமையான பனிப்பொழிவு மற்றும் காலநிலையால் வசந்த காலத்தை வரவேற்று காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Europe ,Asia , Acute cold,snowfall,Asia,Europe,nature,civilian life,suffering
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!