×

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சென்னை : பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை கோரிய தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட , அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த படங்கள் இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 37 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் 3,710 சட்ட விரோத இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், இதே போன்று கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் உத்தரவின் அடிப்படையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Supreme Court , Interview, vishvasam, websites, Rajinikanth, high court, ban
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...