×

ஆஸி., மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பும்ராவுக்கு ஓய்வு: சித்தார்த் கவுல், முகமது சிராஜ் அணியில் சேர்ப்பு

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் மட்டும் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேலை சுமையை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அனைவரையும் விட பும்ரா அதிக ஓவர்கள் (157.1) வீசியுள்ளார். அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,A One Day ,New Zealand ,Siddharth Gowle ,Mohammed Siraj , Australia,New Zealand,One Day,T20 series,Bumrah,rested,Siddharth Kaul,Mohammed Siraj,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...