×

இந்தியாவின் மோசமான முதல்வர்..பினராயி விஜயன் என கூகுள் தேடுதளத்தில் வெளியான தகவலால் சர்ச்சை!

புதுடெல்லி: இந்தியாவின் மோசமான முதல்வர் பினராயி விஜயன் என கூகுள் தேடுதளத்தில் வெளியான தகவல் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள அதிகம் பேர் பயன்படுத்தும் கூகுள் தேடுதளம், புதுப்புது தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. இந்த கூகுள் தளம் அதன் புரோக்கிரமார்கள் இயற்றும் அல்காரிதம் கோட்களின் அடிப்படையில் தேடப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நபர்களின் படங்களைக் காட்டும். இது திட்டமிடப்பட்டு தனிமனிதர்களை விமர்சிக்கும் செயல் அல்ல. அதன்படி தேடுதளங்கள் குறிப்பிட்ட நபரைப் பற்றி பெரும்பாலான தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே இந்த சர்ச் ரிசல்ட் கிடைக்கிறது. இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோவிலுக்குள் நுழைய வைக்க பினராயி விஜயனின் இடதுசாரி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.

இதனால் பாரதிய ஜனதா உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள், கோயில் நிர்வாகத்தினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் என கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பலரின் அதிருப்திக்கு பினராயி அரசு ஆளாகியுள்ளது. இதன் விளைவாக, சமூக வலைதளங்களில் அவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார். இதனால் தற்போது பேட் சீஃப் மினிஸ்டர்(மோசமான முதல்வர்) என கூகுளில் தேடினால் பினராயி விஜயனின் படம் மற்றும் அவரது விக்கிபீடியா லிங் வருகிறது. இது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்கட்சிகளின் சதியே காரணம் என்றும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர்குலைக்க செய்யப்படும் திட்டமிட்ட செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக முட்டாள் யார்? என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரும், உலகின் டாப் 10 கிரிமினல்கள் யார்? என தேடினால் அதில் தாவூத்இப்ராகிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pranayari Vijayan ,India ,Google , India, Bad Chief Minister, Pinarayi Vijayan, Google, Kerala, Sabarimala
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...