×

கூகுள் குரோம் ப்ரவுசருக்கு போட்டியாக களமிறங்கிய ஜியோ பிரவுசர் !!

மும்பை : கூகுள் குரோம் ப்ரவுசருக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பிரவுசர் என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2 வருடங்களாக தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஜியோ வைஃபை, ஜியோ ஜிகா ஃபைபர் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது. அந்த வகையில் இணையத்தில் எளிமையாகவும் வேகமாகவும் பிரவுசிங் செய்ய ஜியோ பிரவுசர் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய பயனாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜியோ பிரவுசரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 8 மொழிகளில் பயன்படுத்தலாம். மற்ற பிரவுசர்களை போன்றே செய்திகள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி என மக்களை கவரும் வகையில் ஜியோ பிரவுசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரவுசரை உபயோகப்படுத்த ஆண்டிராய்டு போன்களுக்கென பிரத்தேயகமாக மொபைல் ஆப்பையும் வெளியிட்டுள்ளது. 4.8 எம்பி அளவுக் கொண்ட இந்த பிரவுசரை கூகுள் பிளே மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Google Chrome, Jio WiFi, Jio , Giga Fiber, JioBoucher
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...