×

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:  பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து  60 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது  சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய  உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, 2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து  சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,DMRC , Economically , ,central government , decision , reservation
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...