இலங்கை அதிபர் சிறிசேனாவிற்கு மனநல மருத்துவ பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி

கொழும்பு: பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேயை நீக்கிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு மனநல மருத்துவ பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை இலங்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி  செய்தது. இலங்கையை சேர்ந்த தக்சில்லா லக்மலி ஜெயவர்த்தனே என்ற பெண், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 13ம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்றத்தை  கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்த உத்தரவிட்டது சட்டவிரோதமானது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை பதவி நீக்கம் செய்தது அரசியலமைப்புக்கு எதிரான சதியாகும். அதிபரின் வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கை  காரணமாக அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அதை தாக்கல் செய்த பெண் ₹1 லட்சம் செலுத்தவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>