×

ஆஸ்திரேலியாவில் ஜெல்லி மீன்கள் தொல்லை அதிகரிப்பு: கடற்கரைகள் அடைப்பு

கான்பெர்ரா: ஜெல்லி மீன்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால், ஆஸ்திரேலியாவில் உள்ள சில கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசியதன் காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள கடற்கரை பகுதிகளை நோக்கி, 15 செண்டி மீட்டர் நீளமுடைய புளூபாட்டில் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. கடலில் ஆழமான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வகை ஜெல்லி மீன்கள் வாழ்கின்றன. அவை ஆழ்கடலில் மட்டுமே வாழும் தன்மை கொண்டவை. கடந்த 2004–ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய இனமாக ‘இருகாண்ட்சி’ என்ற ஜெல்லிமீன் வகை அறிஞர்களால் கண்டறியப்பட்டது. இது, உலகிலேயே அதிக வி‌ஷத் தன்மையுள்ள ஜெல்லி மீன் என்ற பெயரினைப் பெற்றது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரைகளில் கடந்த வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 600 பேர் ஜெல்லி மீன்கள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும், இவை கடித்தால் மிகுந்த வலியை ஏற்படுத்தும். இதனால் கோல்ட் கோஸ்ட் (Gold Coast), சன்ஷைன் கோஸ்ட் (Sunshine Coast) வட்டாரங்களில் உள்ள கடற்கரைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் கூடுதல் மீன்கள் கரையை நோக்கி வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,beaches , Australia, jellyfish, harassment, beaches shutters
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...