×

ஆண்டிபட்டி பகுதியில் வறளும் கண்மாய்கள் : கால்நடை வளர்ப்போர் கவலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் நீர் வற்றி வருவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பதையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. இந்நகரைச் சுற்றியுள்ள கன்னியப்பாபிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, பாலகோம்பை, கதிர், சித்தார்பட்டி, ஜி.கல்லுபட்டி, கணேசபுரம், இராமலிங்கபுரம், மரிகுண்டு, எரதிமக்காள்பட்டி, ரோசனபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் செம்மறியாடுகள் வெள்ளாடுகள், தொழு மாடுகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்க்கப்படுகின்றன.

இதில் சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்காக மலை சார்ந்த இடங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு கூட்டிச் செல்கின்றனர். கால்நடைகள் கிடைக்கும் பசுந்தீவனங்களை மேய்ந்துவிட்டு குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் குடித்து வந்தன. ஆனால், தென்மேற்கு பருவமழை மற்றும் புயல்களினால் பலன் தரும் என்ற எதிர்பார்ப்பில், இருந்த இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால் போதிய மழைப்பொழிவு இல்லாததால் ஒரு சில சிறு குளங்கள் கண்மாய்களுக்கு மட்டும் நீர்வரத்து குறைந்த அளவு வந்தது. இப்போது இந்த குளங்களில் உள்ள தண்ணீரும் குறைந்து வருவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில், கடந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் கேரளாவில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஆனால், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும் வந்த கஜா புயலால் தமிழகத்தில் உள்ள கடற்கரை மாவட்டங்கள் பெருத்த சேதம் அடைந்தது. ஆனால் இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், வைகை அணை கடந்த 2018ம் ஆண்டு இரண்டு முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால், மிதமான மழையினால் ஒரு சில குளங்களுக்கு சிறிதளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. அதுவும் தற்போது வேகமாக குறைந்து கண்மாய்கள் வறண்டு வருகிறது. இதனால் கால்நடைகளை வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’’ என்று கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Andipatti , Andipatti, kanmaykal, cattle
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...