×

நெல்லை ஜி.ஹெச்சில் முதல் முறையாக ஆபரேஷன் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்புகள் 8 பேருக்கு தானம்: சென்னை, திருச்சி, மதுரைக்கு பறந்தன

நெல்லை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக ஆபரேஷன் மூலம் தானமாக பெறப்பட்டு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லையை  சேர்ந்த 8 பேருக்கு பொருத்தப்பட்டது. நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் மூன்று ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.  இவரது மனைவி சாரதா. இவர்களது ஒரே மகன் பழனிகுமார் (39). எம்காம் படித்துள்ள இவர், அங்குள்ள தனியார்  கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை.கடந்த 2ம்தேதி பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வெள்ளை அடிப்பதற்கு சுண்ணாம்பு வாங்க பழனிகுமார், நண்பரின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது பக்கவாட்டு சாலையில் அதிவேகமாக வந்த வந்த பைக்  மோதி பலத்த காயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும் பழனிகுமார், மூளைச்சாவு அடைந்தார்.

இதுகுறித்து மருத்துவ குழுவினர் அவரது தாய் சாரதாவிடம் தெரிவித்தனர். அவர், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதையடுத்து பழனிகுமாரின் இதயம், 2 கிட்னி, கல்லீரல், கண்கள், தோல்  ஆகியவற்றை ஆபரேஷன் மூலம் மருத்துவ குழுவினர் நேற்று அகற்றி எடுத்தனர். இதில் இதயம், ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு 15 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு  கொண்டு செல்லப்பட்டது. 3.40 மணிக்கு கல்லீரல் திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கிட்னிகளில் ஒன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிக்கும், மற்றொன்று நெல்லை அரசு மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள ஸ்டார்  கிம்ஸ் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை மலர் மருத்துவமனைக்கும், கண்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், தோல் கோவையில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. நெல்லை அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் முதன் முதலாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டு உறுப்புகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : studio ,Nellai GHA ,Chennai ,Trichy ,Madurai , Operation ,irst , ,Chennai, Trichy, Madurai
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு