×

நிர்ணயித்த இலக்கை எட்ட வேண்டும் வரி வசூல் போதாது ரெய்டு நடத்துங்க

* வரி மோசடி செய்வோர் மீது வழக்கு
* வருமான வரித்துறை திடீர் கெடுபிடி

புதுடெல்லி: நேரடி வரி வருவாயை அதிகரிக்க ரெய்டு நடத்த வேண்டும். வரி ஏய்ப்போருக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும் என வருமான வரி அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வருமான வரித்துறைக்கு மண்டலம் வாரியாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இலக்கு நிர்ணயித்த அளவுக்கு வரிவசூல் இல்லை.  நடப்பு நிதியாண்டு முடிய 3 மாதங்களே உள்ள நிலையில், வரி வருவாயை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட உள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர் சுசில் சந்திரா,  வருமான வரித்துறை முதன்மை ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 அதில், வரி வசூல் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. பெரும்பாலான வருமான வரித்துறை மண்டலங்கள் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். வரி வசூலை  அதிகரிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்.
 கடந்த ஆண்டு டிசம்பர் வரை நேரடி வரி வசூல் 13.6 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கான 14.7 சதவீதத்தை விட இது குறைவு. நிகர வரி வசூல் 14.1 சதவீதம் உள்ளது. இது சற்று வளர்ச்சிதான்.  இருப்பினும், பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்ட ₹11,50,000 கோடியை விட குறைவுதான். இலக்கை எட்ட சில உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்.  வரி பாக்கி அதிகம் உள்ள, வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டு அதிரடி ரெய்டுகளை நடத்த வேண்டும். வழக்கமான வரி வசூல் பாணி பலன் தரவில்லை என்றால், வரி நிலுவை தொடர்பாக  தொடரப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று வசூல் செய்ய வேண்டும். வரி ஏய்ப்பு அல்லது மோசடி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக ஆய்வு செய்து ரெய்டு நடத்த வேண்டும்  என குறிப்பிட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : achieve, goal, Release,taxes
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...