×

ஆப்கானிஸ்தானில் பரிதாபம் தங்க சுரங்கம் சரிந்து 30 தொழிலாளர் பலி

குண்டஸ்: ஆப்கானிஸ்தானில் சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பதக்‌ஷான் மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தின் ஆற்றுப் படுகையில் தங்கம் கிடைப்பதாக மக்கள் நினைக்கின்றனர். எனவே, அரசிடம் உரிய அனுமதி பெறாமல் அவர்களாகவே சொந்தமாக சுரங்கத்தை  வெட்டி தங்கம் எடுக்கும் முயற்சியில்  சட்ட விரோதமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், 200 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்ட சுரங்கத்துக்குள் ஏராளமான மக்கள்  தங்கம் எடுக்கும் முயற்சியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சுரங்கத்தில் திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில், உள்ளே  இருந்தவர்கள் சிக்கி புதைந்தனர். இவர்களில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நிக் முகமது நசாரி கூறுகையில், சுரங்கத்தில் ஈடுபட்டவர்கள் தொழில்முறை சார்ந்தவர்கள் கிடையாது. பல ஆண்டுகளாக கிராம மக்கள் இந்த பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். அவர்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. சுரங்கத்தில் எப்படி மண் சரிவு ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றார். விபத்து நடந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் செல்லும் முன்பாகவே, சுரங்கத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களை கிராம மக்களே மீட்டு விட்டனர். அந்த இடத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து  வருகிறது. மீட்பு பணிக்கு உதவ ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு,  மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gold mine ,Afghanistan , A wounded,mine, Afghanistan, killed, 30 workers
× RELATED பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி