×

மலேசிய மன்னர் பதவி விலகினார்

கோலாலம்பூர்: ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்பே மலேசிய மன்னர் முகமது நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மலேசிய மன்னராக முகமது இருந்தார். இவர் 2 மாத மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் ரஷ்யாவில் திருமணம் முடித்ததாக சமூகவலை தளங்களில் போட்டோக்கள் வெளியாயின. ஆனால்  இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் மன்னர் முகமது கடந்த வாரம் தனது பணிகளை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில் அவர் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மலேசியாவில் மன்னர் குலத்தைச் சேர்ந்த 9 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் இருந்துதான்  மன்னர்கள் சுழற்சி முறையில் பதவி ஏற்கின்றனர். இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளர் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளனர். இங்கு நடைபெறும் ஒட்டெடுப்பு மூலம் அடுத்த மன்னர் தேர்வு செய்யப்படுவார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : king ,Malaysian , Malaysian,king,resigned
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...