×

விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்ற வடமாநில வாலிபர் மெரினாவில் சடலமாக மீட்பு

* அடித்துக் கொலையா? விசாரணை
* சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறந்துகிடந்த வடமாநில வாலிபர், போலீசார் தாக்கியதில் இறந்தாரா என்று விசாரணை நடத்தப்படுகிறது. இதுசம்பந்தமாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு  செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாஸ்ட்புட் கடையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திரகுமார் பிரசாத் (36) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 3ம் தேதி காமராஜர் சாலையோரம் காயங்களுடன் இறந்து கிடந்தார்.  இதுபற்றி அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரகுமார் பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். ராஜேந்திரகுமார் பிரசாத் கடந்த 2ம் தேதி இரவு குடிபோதையில் மெரினா சாலையில் நின்றார். இதை பார்த்த வாலிபர்கள் சிலர், பைக்கை திருட வந்ததாக  கூறி ராஜேந்திரகுமார் பிரசாத்தை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து வந்த உதவி கமிஷனர் ஒருவர், அங்கு சென்று விசாரித்தபோது அந்த வாலிபர், பைக் திருட வந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்பிறகு பொதுமக்கள் பிடியில் இருந்து ராஜேந்திரகுமார் பிரசாத்தை மீட்டு போலீசாரின் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அந்த வாலிபரை தாக்கிய வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது. காவல் நிலையம் சென்றபோது, ராஜேந்திரகுமார் பிரசாத் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டாராம். அப்போது உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.  இதன்பிறகுதான் ராஜேந்திரகுமார் பிரசாத் காமராஜர் சாலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.இவ்வாறு தெரியவந்துள்ளது. மேலும் அவசர, அவசரமாக உடலை கைப்பற்றி உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
 காவல்நிலையத்தில் போலீசார் அடித்ததால் உயிரிழந்ததாகவும் யாருக்கும் தெரியாமல் உடலை காமராஜர் சாலையில் வீசிவிட்டு சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ராஜேந்திரகுமார் பிரசாத் இறந்துகிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று அதன் அடிப்படையில் உயர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உதவி ஆய்வாளர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இதன்பிறகுதான் ராஜேந்திரகுமார் பிரசாத் இறந்து கிடந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : northwest ,rescuers ,victim ,Marina , Police ,northwest, police arrested ,victim's rescuers, Marina
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி