×

ஆசிய கோப்பை கால்பந்து தாய்லாந்தை பந்தாடியது இந்தியா

அபு தாபி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யுஏஇ) நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன்  மோதியது. இந்திய அணி நட்சத்திர வீரர் சுனில் செட்ரி 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தாய்லாந்தின் டாங்டா 33வது நிமிடத்தில் பதில் கோல் அடிக்க 1 -1 என சமநிலை ஏற்பட்டது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் துடிப்புடன் விளையாடிய இந்திய அணிக்கு, செட்ரி 46வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து அனிருத் தாபா 68வது நிமிடத்திலும், ஜெஜே லால்பெகுலா 80வது  நிமிடத்திலும் கோல் அடிக்க, இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அடுத்து தனது 2வது லீக் ஆட்டத்தில் 10ம் தேதி யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. நேற்றைய போட்டியில் 2 கோல் போட்ட செட்ரி, தாய்நாட்டு அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை (65 கோல்) முந்திச் சென்று 2வது இடத்தை  பிடித்தார். இதுவரை 67 கோல் அடித்துள்ள அவர், போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (85 கோல்) அடுத்த இடத்தில் உள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asia Cup , Asia,Cup Football,Thandai Thandai
× RELATED மகளிர் ஆசிய கோப்பை 2024: ஜூலை 21ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்!